தஞ்சை தமிழ் பல்கலைக்கழக்கத்தில் பன்னாட்டு கருத்தங்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக்கத்தில் பன்னாட்டு கருத்தங்கம்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை நடத்தும், புழங்கு பொருள் பண்பாடு, வாய்மொழி வரலாறு ஆவணமாக்களும், பரவலாக்களும், பன்னாட்டு கருத்தரங்கம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேரவைக்கூடத்தில், புதன்கிழமை நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்,வி. திருவள்ளுவன் தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், இரா. காமராசு வரவேற்புரையாற்றினார், பதிவாளர்(பொ) முனைவர்,சி. தியாகராஜன், மொழிபுலத்தலைவர், முனைவர்,ச.கவிதா ஆகியோர் வாழ்த்துரை. வழங்கினர். இலங்கை யாழ்ப்பாண  பல்கலைக்கழக, மேனாள் துணை வேந்தர், பேராசிரியர் என். சண்முகலிங்கம், மையக்கருத்துறையாற்றினர், புழங்கு பொருள் பண்பாடும், வாய்மொழி வரலாறும்": நூல் வெளியீடு நடந்தது, மேற்கண்ட நூலை நாட்டுப்புறக் கலைஞர்,
கலைமாமணி, தஞ்சை, சின்னப்பொண்ணு நூலை வெளியிட, தஞ்சை நாட்டுப்புற ஆய்வாளர், எழுத்தாளர், தஞ்சை சாம்பான் நூலை பெற்றுக்கொண்டார்.  



இந்த நிகழ்வில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மற்றும் பல திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்,  நிகழ்ச்சியின் நிறைவாக, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்த்துறை தலைவர், ஒருங்கிணைப்பாளர், திட்டங்கள், பேராசிரியர்,வீ. செல்வகுமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/