தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’நல்லிணக்க நாள்” உறுதிமொழி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’நல்லிணக்க நாள்” உறுதிமொழி.

தூத்துக்குடி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நல்லிணக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று (18.08.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன்" என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்த உறுதிமொழியில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சுபணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/