நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நபார்ட் திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நபார்ட் திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது

 

கூடலூர் வனக்கோட்டம், கூடலூர்
வனச்சரக பகுதிகளிலிருந்து கோடை காலத்தில் வனவிலங்குகள் நீரைத் தேடி ஊருக்குள்  வருவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட வன அலுவலர் திரு.கொம்மு ஓம்காரம் அவர்களின் முன்னெடுப்பில் 202-23 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கூடலூர் வனக்கோட்டம் கூடலூர் வனச்சரக பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நபார்ட் திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது 

மேலும் பழைய கசிவுநீர் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் பராமரிக்கப்பட்டுள்ளது தற்போது  வனத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள  நீர் நிலைகளில் நீர் நிரம்பி யானை,புலி போன்ற விலங்குகள்   நீர் நிலைகளில் அதிகம்  காணப்படுகிறது .

இதனால் வனவிலங்குகள் நீர் தேவைக்காக ஊருக்குள் வருவது தவிர்க்கப்பட்டு மனித விலங்கு மோதல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/