திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ நிதியில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ நிதியில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை துவக்கம்!

.com/img/a/

நவீன முறையில் தரமான கல்வியை அரசு பள்ளி மாணவர்கள் பெற்றிட வழி வகுக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, (2022-2023)  திருப்பூர் தெற்கு தொகுதி, 34-வது வார்டு, கருமாரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மண்ணரை அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில், மாணவர்களின் கல்வி சிறக்க நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்பறையினை திறந்து வைத்து சிறப்பித்தார்.

 
இந்நிகழ்வில், தெற்கு மாநகர செயலாளர் T.K.T. மு. நாகராசன், வடக்கு மாநகர செயலாளர்; மேயர் ந.தினேஷ்குமார், பகுதி செயலாளர் மு.க.உசேன், வட்ட செயலாளர்கள் பி.ஆர்.இளங்கோ, பொன்னுச்சாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.செந்தில்குமார், வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ம.சூர்யா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் துரை.ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிவபாலன், சீராஜூதீன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad