மாற்று திறனாளிகள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் வேண்டுகோள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

மாற்று திறனாளிகள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் வேண்டுகோள்.

thumbnail_MAY%20-%2025%20-%20A

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.2000/-மும் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை ரூ.6000/- மும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8000/-மும் இளநிலை (UG) ரூ.12000/- மற்றும் முதுநிலை(PG) 14000/-மும் வழங்கபட்டு வருகிறது. 


மேலும் பார்வையற்ற மாணவ/மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3000/-மும் இளநிலை (UG) ரூ.5000/- மற்றும் முதுநிலை (PG) 6000/-மும் வழங்கபட்டு வருகிறது.எனவே கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று புத்தகநகல் ஆகியவற்றுடன் இணையதளத்தில் (study certificate), வங்கி என்ற விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. 


இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் (தொலைபேசி எண்.04142 284415) அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்  தெரிவித்துள்ளார், https://tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx இணையத்தில் காணலாம்.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad