இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மின்கோட்டம் பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பள்ளூர், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம், அரிகில்பாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்துராயன்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அரக்கோணம் மின்கோட்ட செயற்பொறியாளர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக