சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உட்கோட்டம், பகண்டை கூட்டுரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மையனூர் கிராம சுற்றுவட்டாரப் கிராம பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறிகிடப்பதாக சமூகவளைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் வீடியோ ஆகும்.


அதை இன்று திருக்கோவிலூர் உட்கோட்டம், பகண்டை கூட்டுரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மையனூர் கிராம சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் திடீரென சத்தம் வேகமாக உணரப்பட்ட சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுவிட்டதாக பொய்செய்தியை சமூகவளைதளங்களில் பரப்பி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். 


இதுபோன்ற பொய்செய்தியை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/