திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மானூர்பாளையத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி'யை கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டித்து தென்னை விவசாயிகள் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மானூர்பாளையத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி'யை கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டித்து தென்னை விவசாயிகள் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மானூர்பாளையம் கிராமத்தில் தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 



தென்னை விவசாயிகள் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு தலைமை அலுவலக செயலாளர் ராமசாமி ஆகியோர்களின் முன்னிலையில் சிதறு தேங்காயை உடைத்து தமிழக அரசை கண்டித்து இதுவரை தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் செவி சாய்க்காமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க கொள்கை பரப்பு மாநில செயலாளர் குண்டடம் ராசு கூறுகையில்: இன்று ரோட்டிலே சிதறு தேங்காய் உடைத்து திமுக அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த மாதம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆரம்பித்து திருப்பூர் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு ஆரம்பித்து ஒவ்வொரு கிராமங்களில் விவசாயிகளில் தலைமையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைவதை கண்டித்து இந்தோனேசியா நாட்டில் இந்தியாவிலும் தமிழகத்திலும் இறக்குமதி செய்யும் உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் பாமாயில் வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் அதற்கு மாற்றாக உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் மனதிற்கு தெம்பு தரும் தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும் என, அதேபோல சத்துணவு மையங்களில் உணவு இருக்கு தேங்காய் எண்ணையை விநியோகம் செய்ய வேண்டும், 35 ஆண்டுகளாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள, ஆனால் இந்தியா முழுவதும் கள்ளு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, ஆகவே அந்த தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் பிராந்தி விஸ்கி விற்பனைக்கு தடை செய்யப்பட்டு தென்னை மற்றும் பனையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கள்ளு'களை விற்க அனுமதி வழங்க வேண்டும் என, மேலும் விவசாயிகளின் பிரச்சனைக்காக தென்னை மரத்திலிருந்து இறக்கும் தேங்காய் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.


மேலும் விவசாயிகளுக்கு உதவி செய்யும் அரசியல் வாதிகளுக்கு நன்றி தெரிவிப்போம் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசியல் வியாதிகளுக்கு எதிர்த்து போராடுவோம் அடுத்த போராட்டம், மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக தேங்காய் விலையை உயர்த்தி தரவில்லை என்றால் அரசு எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து செவி சாய்க்காமல் இருந்தால் இந்த சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னை தலைமைச் செயலகம் அலுவலகம் முன்பு அலுவலகம் முன்பு அனைத்து தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி அங்கு சிதறு தேங்காய் உடைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.


இந்தப் போராட்டத்தில் பொங்கலூர் ஒன்றிய தலைவர் தங்கவேல்,ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மேலும் சுமார் 200 மேற்பட்ட தென்னை விவசாயிகள் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் ஏறுமுனை இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி அடைய செய்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/