புவனகிரி அருகே நெகிழ்ச்சி சம்பவம்; பிரான்ஸ்ஸில் வேலை பார்க்கும் தமிழர் தான்படித்த பள்ளியின் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

புவனகிரி அருகே நெகிழ்ச்சி சம்பவம்; பிரான்ஸ்ஸில் வேலை பார்க்கும் தமிழர் தான்படித்த பள்ளியின் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் புவவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஏர்போர்ட் பணியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான தெய்வப்பிரகாசம் தனது மனைவி சுந்தரி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்தார். 


அப்போது தான் படித்த நத்தமேடு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய தெய்வப்பிரகாசம் தனது குடும்பத்தினருடன்  பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணப்பொருட்களை வழங்கினார். மேலும் அவர் கூறும்போது இக்கிராமத்தில் பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான  இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தானாக வழங்கி இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை தனியாக செய்து வருவதாகவும் தெரிவித்தார். 


நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த தான்,  கடந்த  இருபத்தியைந்து ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் விமானநிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் அங்கேயே குடியுரிமைபெற்று வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/