தென்கரை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

தென்கரை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது

.com/img/a/

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திரக் கூட்டம் நேற்று  பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.  பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ராதா ராஜேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த கூட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்  குமரேசன், தேவராஜ், முருகாயி, முத்துகாமாட்சி, மகேஸ்வரி, அழகுத்தாய்,  அனிதா, பூசாரி கருப்பன், சாந்தி, சிட்டம்மாள், கைலாசம், லட்சுமணன், கோமதி  ஆகிய வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக  பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில், தென்கரை  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த  மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad