வேலூர் மாவட்டம் குடியாத்ததில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

.com/img/a/

வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின்  85  வது பிறந்தநாள் முன்னிட்டு கண் காது பல் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்  பலநோ் சாலை அரசமரம் அருகில் உள்ள எம்எஸ் மஹால் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.ரமேஷ் முதலியார் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஜிஎஸ். செல்வராஜ் செட்டியார் வரவேற்புரை ஆற்றினார், முகாமை வேலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் வழக்கறிஞர் என். குமார் அவர்கள் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் மாவட்டத் தலைவர் கு வெங்கடேசன் மற்றும் நகர பாமக மேற்பார்வையாளர்கள் ஆர்.உமா மகேஸ்வரி ஆர்எம். கோபி ராஜிப்பட்டி எஸ். பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் பொதுமக்கள் கைத்தறி நெசவாளர்கள் விசைத்தரியாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்கள் கலந்து கொண்டவர்கள் இவர்களுக்கு கண் காது பல் சிகிச்சை பரிசோதனைகள் செய்யப்பட்டது சுமார் 300-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர் இறுதியில் நகர பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad