கிருஷ்ணகிரி கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி

கிராம வேளாண் முன்னேற்றக் குழு
விவசாயிகளுக்கு பயிற்சி


ஊத்தங்கரை, ஆக. 25: ஊத்தங்கரை வட்டார வேளாண்மைத் துறைறயில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் பெரியதள்ளப்பாடிகிராமத்தில், அட்மா திட்டத்தின்கீழ் கிராம வேளாண் முன்னேற்றறக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் பார்த்திபன் தோட்டக்கலைத் துறைறயில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பயன்கள் குறித்தும், பயிர்க்கடன் அட்டை பெறற விண்ணப்பிப்பது பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள், சொட்டுநீர்ப் பாசனத்தில் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.


அட்மா உதவி தொழில்நுட்ப அலுவலர் சாரதி, உழவன் செயலி பதிவிறறக்கம் செய்வது அதில் இடுபொருள் முன்பதிவு செய்வது குறித்து விளக்கினார். இப் பயிற்சியில் 30 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/