தூத்துக்குடி - சாயர்புரம் செபத்தையாபுரம் லயன்ஸ் கிளப்பில் சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - சாயர்புரம் செபத்தையாபுரம் லயன்ஸ் கிளப்பில் சுதந்திர தின விழா.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் செபத்தையாபுரம் லயன்ஸ் கிளப் சார்பில் சுதந்திர தின விழா புளிய நகர் றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. சாயர் மண்டல தலைவர் முனைவர் லயன் ஆலயமணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுவீட் ரோஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.


லயன்ஸ் சங்க தலைவர் நல்லாசிரியர் ஞானராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை சங்கச் செயலர் லயன் எஸ் வி பி எஸ் ஜெயக்குமார் வழங்கினார். லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சீருடைகளை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் தலைவர் லயன் அறவாழியும், எழுது பொருட்களை முன்னாள் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் லயன் சன்னியாசியும் வழங்கினர். 


பள்ளிக் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் மரக்கன்றுகளை செபத்தையாபுரம் ஊர் நல கமிட்டி தலைவர் லயன் அமிர்தராஜ் வழங்கினார். சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலையும் மாலையும் சிறப்பாக வாலிபால் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர் நீதியின் சூரியனை பாராட்டி கௌரவ உதவி தொகையினை லயன் அருண் வழங்கினார்.



ஐந்து இந்தி தேர்வுகளை சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற்று ஆறாவது தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் மாணவி பிரவீன் பூர்வாவுக்கு லயன் சங்கம் சார்பில் படிப்பு மற்றும் புத்தகம் வாங்கிட உதவித் தொகையினை லயன் பொன்ராஜ் ஜாண்சன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க உப தலைவர் லயன் எம் ஜி நாகராஜன் மற்றும் லயன் பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Lion Vn சரவணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/