உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் வெற்றி விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் வெற்றி விழா!

திருப்பூர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளுக்கு தூய்மை பணி உபகரணங்கள் வழங்கப்பட்டது. விளையாட்டு துறை அமைச்சரும் நடிகரும் ஆகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் 50 நாள் ஓடி யதை தொடர்ந்து இதை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. உபகரணங்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் முன்னிலையில் பள்ளிக்கு வழங்கப்பட்டது. 


இதில் மாநகர தலைவர் சஷ்டி விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர் ஆனந்த், மாநகர செயலாளர் தம்பி குரு பரணி, உடன் மன்ற பொறுப்பாளர்கள் சங்கர், ஆட்டோ முருகன், சூர்யா, மணிமாறன், சதீஷ்குமார், மனோஜ், சசி, மணிபாரதி, கோகுல், ஹரிஷ் குமார், ஜெயராம், அஸ்வின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/