அச்சம் தவிர் குறுபடம் அனைவரின் பாராட்டுகளையும் வென்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

அச்சம் தவிர் குறுபடம் அனைவரின் பாராட்டுகளையும் வென்றது

.com/img/a/

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அச்சம் தவிர் குறுபடம் அனைவரின் பாராட்டுகளையும் வென்றது தலைநகரில் தலை நிமிர்ந்த தமிழகம் குறுபட போட்டில் மூன்றாம் இடம். 



கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு சமுக பணி மற்றும் ஏழை எளிய மக்களுக்கான  சட்ட பணியை மிக சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளிவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவத் தலைவர் மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் M. கற்பக விநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி  மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் R.K. குமார் அவர்களின் மேற்காட்டுதலின் படி  செயலாளர் V.H சுப்பிரமணியம் மற்றும் மாநில தலைவி லதா அர்ஜுனன் அவர்களின் ஆலோசனையின் படியும் சமீபத்தில் எடுக்கப்பட்ட "அச்சம் தவிர்" குறும்படம் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில்  நடத்தப்பட்ட 2022 குறும்பட போட்டியில்   தேசிய அளவில்  மூன்றாம் இடம் பிடித்தது.



தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்  தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த படக்குழுவினருக்கு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது, இதில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் R.K. குமார் , செயலாளர் V.H சுப்பிரமணியம், மாநில தலைவி லதா அர்ஜுனன் ஆகியோர் இந்த விருதை நேரில் பெற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad