திருச்செந்தூர் முருகன் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தார்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தார்!

.com/img/a/

  
உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தருமபுர ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.


மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கயிலாய பரம்மரை தருமபுரம் ஆதீனம் ஆகும். 18 சைவ ஆதீனங்களில் ஒன்றாக விளங்கி வரும் இந்த ஆதீனம் சைவ சமய மற்றும் பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறது. இந்த ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வருகிறார்.



தென் மண்டல யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனம் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோவில், சிவசைலம், குற்றாலம், சுசீந்தீரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு நேற்று இரவு திருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் கிளை மடத்தில் தருமபுரம் ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் தமது அடியார்கள் புடைசூழ வந்திருந்தார். காலை தருமபுரம் ஆதீனம் திருச்செந்தூர் சன்னதி தெரு தருமபுரம் ஆதீனம் கிளை மடத்தில் செந்தமிழ் சொக்கநாதர் ஆன்மார்த்த வழிபாடு நடத்தினார். தொடர்ந்து திருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள தூண்டுகை விநாயகர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.



பின்பு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்திருந்த தருமபுரம் ஆதீனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் திருநெல்வேலி தென் மண்டல கட்டளை விசாரணை தம்பிரான் திருஞானசம்பந்த தம்பிரான், ஆதீன பணியாளர்கள் மற்றும் அடியார்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad