இரணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

இரணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி.

அம்மூர், சோளிங்கர், அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான காற்று, இடி,மின்னலுடன் கனமழை.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது நிலையில் இன்று எதிர்பாராத விதமாக அம்மூர், சோளிங்கர் காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம்  போன்ற பகுதிகளில் மாலை ஐந்து மணியளவில் சுமார் ஒரு மணி நேரம்   மிதமான காற்று,  இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.


ஆடி கிருத்திகை பண்டிகை நாளான இன்று  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  வேலூர், ரத்தினகிரி, திருத்தணி,  திமிரி போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோவிலுக்கு நேத்து கடன் மற்றும்  வேண்டுதல் நிறைவேற   சென்றிருந்த பொதுமக்கள் எதிர்பாராத விதமாக காற்றுடன் செய்த  கனமழையால்  வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.



வாகன ஓட்டிகளுக்கும் இந்த மழை  அதிர்ச்சியாக இருந்தது, மேலும்  திடீர் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது இதனால்  பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/