கோவை மாவட்டம் ஆர் எஸ் புராத்தை சேர்ந்த கதிரவன் இவர் நேற்று ஆர் எஸ் புறத்தில் உள்ள ஒரு கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார் சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தபோது இரண்டு வாலிபர்கள் அவருடைய வாகனத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைப் பார்த்த கதிரவன் மற்றும் அக்கம் பக்கத்தினர் வாலிபர்களை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர் விசாரணையில் போத்தனூர் சேர்ந்த கூலி தொழிலாளி துரைராஜ் ஆர் எஸ் புறத்தை சேர்ந்த சரவணன் என்பவர்கள் மீது பல திருட்டு வழிப்பறி உட்பட பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது மேலும் அவர்களை கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக