முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முத்தாய்ப்பு திட்டமாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டம் தமிழக முழுவதும் விரிவாக்கம் செய்யும் விதமாக இன்று தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டது இதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம்10 வது வார்டு ஆத்துப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பத்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு மாணவர்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பத்தாவது வட்ட திமுக செயலாளர் சசிகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பார்த்திபன், மற்றும் திமுக நிர்வாகிகள் நாகராஜ், ரமேஷ், பாலு, ஐயப்பன், ரஞ்சித், ஆனந்த், ரமேஷ், அருண், சேகர், தங்கராஜ், ராஜேந்திரன், விஜயன், நவீன், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக