செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை.

.com/img/a/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தொடர் விபத்துக்கள் நிகழும் புளிரம்பாக்கம் கிராமம் அருகே உள்ள அபாயகரமான வளைவுகளை கொண்ட சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் கிராமம் அருகே அபாயகரமான வளைவுகள் உள்ளது. இந்த வழியாக செய்யாறில் இருந்து காஞ்சிபுரம், சென்னை, திருப்பதிக்கும், இதேபோல, ஆரணி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளுக்கும் அதிக அளவில் தனியாா், அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும், சுமாா் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வரும் செய்யாறு சிப்காட்டிற்கு 100 -க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவன பேருந்துகள் உள்பட பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன. 


இதேபோல, தொழிற்பேட்டை பகுதிகளான ஒரகடம், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் இருந்தும், சென்னை, காஞ்சிபுரம் போன்ற பல பகுதிகளில் இருந்தும் தனியாா் கல்லூரி பேருந்துகளும் இந்த வளைவுப் பாதை வழியாகவே சென்று வருகின்றன.


இந்நிலையில், இந்த வளைவு குறுகியப் பாதையாக இருப்பதால் தொடா் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. சாலையை அகலப்படுத்த கோரிக்கை: போக்குவரத்து நெரிசல் மிக்க புளியரம்பாக்கம் அபாயகரமான வளைவு சாலைக்கு மிக அருகே உள்ள கன்னியம்நகா் ஏரி, புளியரம்பாக்கம் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வேண்டும். மேலும், புளியரம்பாக்கம் வளைவுப் பாதை தொடக்க பகுதியில் அதிக இடம் இருப்பதால் அந்தப் பகுதியிலும் சாலையை அகலப்படுத்த வேண்டும். 


செய்யாறிலிருந்து செல்வதற்கும் ஒரு வழி, வருவதற்கும் ஒரு வழி என தனித்தனியாக வாகனங்கள் சென்று வரும் வகையில் புளியரம்பாக்கம் வளைவுப் பாதைத் தொடக்கத்தில் இருந்து விண்ணவாடி கூட்டுச்சாலை வரையில் சாலையை அகலப்படுத்துவதுடன், விபத்துகள் ஏற்படாதவாறு சாலையின் நடுவே தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad