உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து தொடங்கிய மாதாந்திர கூட்டம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் சாதாரண மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தம்பியும், 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் பேசுகையில் " தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பெரியகுளம் நகராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பாக,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் என்ற முறையிலும் பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் என்ற முறையில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்..
மேலும் எங்களுக்கு மக்கள் பணியாற்றிட நல்ல தெரு வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று வாழ்ந்து மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் திறம்பட கழக பணியாற்றி, கழகத்தை நல்வழிப்படுத்தி, தேர்தல் களத்தில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்த தமிழக முன்னாள் முதல்வர்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொளவதாகவும் கூறினார். மேலும் கூட்டத்தின் வாயிலாக பல்வேறு கட்சியைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக