மதுரை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்; இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

மதுரை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்; இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

.com/img/a/

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள என். கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48), விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், மகள் உள்ளனர். பண விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் விசாரணைக்காக ராமச்சந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். 


இதையடுத்து அவர் முதற்கட்ட விசாரணைக்கு சென்று வந்தார். அடுத்த கட்ட விசாரணைக்கும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த ராமச்சந்திரன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


நாகையாபுரம் அருகே உள்ள சின்னுக்கம்பட்டியை சேர்ந்தவர் பாபுராஜ். இவரது மகன் பாரதிராஜா (29). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad