கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர்,  செய்தியாளர்களுடன் ஆய்வு.


கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் தனியார் பங்களிப்புடன் நடத்திவரும் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் -


ஜேப்பியார் மீன்பிடி துறைமுகமமானது சுமார் 150 மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் சுமார் 500 எண்ணிக்கையிலான நாட்டுப்படகுகள் தங்குதளமாக கொண்டு மீன்டி தொழில் புரிந்து வருகின்றன. துறைமுக ஆய்வில் போது மீன்பிடி துறைமுக வளாகத்திலுள்ள பனிப்பொறி நிலையம், மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தும் படகு அணையும் தளம், மீன் எலக்கூடம், மீன்பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இதர கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் படகணையும் தளம் ஆய்வு செய்யப்பட்டு, பணிகனை விரைந்து முடித்திட மீன்பிடி துறைமுக பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.


இம்மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளின் மீன்பிடிப்பு முறைகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநரிடம் கேட்டறியப்பட்டது. மீன்பிடி துறைமுக மேலாண்மை குறித்து துறைமுக மேலாளரிடம் விபரங்கள் கேட்டறியப்பட்டது. மேலும். முட்டம் மீன்பிடி துறைமுக விசைப்படகு சங்க உறுப்பினர்கள் பதிவு செய்யப்படாத இழுவலை விசைப்படகுகளை சட்டத்திற்குட்பட்டு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். மீனவ பிரதிநிதிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நடைபெற்ற செய்தியாளர் பயணத்தின்போது மீன் வளத்துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன். ஜேப்பியார் மீன்பிடி துறைமுக மேலாளர் .கார்த்தி. மீனவ பிரதிநிதிகள் .ஆண்டனி. .ரமேஷ், .சகாயம், .கில்லாரி, உதவி இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/