கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிய மென்பொருள் மூலம் செல்போன் அழைப்புகளை பகுப்பாய்வு செய்து குற்றவாளிகளை தேடுதல் மற்றும் விரைவாக கண்டுபிடிக்கும் பயிற்சி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது சென்னை மென்பொருள் வல்லுநர் மகேந்திர ரெட்டி புதிய மென் பொருள் குறித்து பயிற்சி அளித்தார் இப்பயிற்சிக்குப் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பேசுகையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க பயனுள்ளதாக இருக்கும் இப்ப பயிற்சியில் பங்கேற்றிருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முழு ஆர்வத்துடன் பயிற்சி பெற்று கடலூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பேசினார் இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார் சீனிவாசலு உதவி காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு ரூபன் குமார் திருமதி காவியா சபியுல்லா விஜயகுமார் ஆரோக்கியராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்
இரண்டு படங்கள் இணைத்து பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக