திருப்பத்தூர் அருகே கலைஞரின் நூற்றாண்டின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அருகே கலைஞரின் நூற்றாண்டின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதன வலசை கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டின் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்த மருத்துவ முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த மருத்துவ முகாமில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம், பல்பிரிவு, காது மூக்கு தொண்டை மருத்துவம், சித்தா, குழந்தைகள் நலம் மகப்பேறு பரிசோதனை, தோல்பிரிவு, ஸ்கேன் பிரிவு, காச நோய் பிரிவு, தொழுநோய் பிரிவு, இயன் முறை மருத்துவ பிரிவு, பொது மருத்துவ, உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது.


மேலும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறிந்து ரத்தத்தில் கொழுப்பின் அளவு இருதய நோய் கண்டறிந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவ முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/