செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழுமன்ற கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமை தாங்கினார் ஒன்றிய குழு துணை தலைவர் வி எஸ் .ஆறாமுதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் வெங்கட்ராமன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பல்வேறு ஊராட்சியில் சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 24 ஒன்றிய கவுன்சிலர்கள் அம்சவல்லி, கொளப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கே எஸ் எம், நேதாஜி, மோகனாம்பாள் கண்ணன், தமிழ்செல்வி, தினேஷ், புலிப்பாக்கம் திம்மாவரம் ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி, சுந்தர்ராஜ், ஏவிஎம். இளங்கோவன், சித்ரா ரவி, மோகனா ஜீவானந்தம், ஷாக்கீர பாஷா, ஜெயலட்சுமி, செல்வகுமாரி, சரிதா பவுல், ஷீலா, சரளா, நிந்திமதி திருமலை, சங்கமித்திரை, பிரேமலதா, தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக