ஜல்லிக்கட்டு காளை திடீரென உயிரிழந்ததால் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு நடத்திய ஜல்லிக்கட்டு காளை ஆர்வலர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

ஜல்லிக்கட்டு காளை திடீரென உயிரிழந்ததால் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு நடத்திய ஜல்லிக்கட்டு காளை ஆர்வலர்கள்.

பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி கிராமத்தில், தமிழகதில் பல்வேறு ஜல்லிக்கட்டு  போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு காளை திடீரென உயிரிழந்ததால் பாரம்பரிய முறைப்படி  இறுதிச் சடங்கு நடத்திய ஜல்லிக்கட்டு காளை ஆர்வலர்கள் இச்சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  Malayandi மலையாண்டி என்பவருக்கு சொந்தமான கருப்பு என்ற ஜல்லிக்கட்டு காளை தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற்று,பரிசுகளை வென்ற இந்நிலையில் திடீரென உயிரிழந்ததால்  ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது அதன் பின் இறந்த ஜல்லிக்கட்டு காளை உடலை ஊரார்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு நடத்தினர் பல்வேறு உரிமைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி வேஷ்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே நெகழ்ச்சி ஏற்படுத்தியது.


தமிழர்கள் ஜல்லிக்கட்டு காளையை தங்கள் வீட்டின் ஒரு நபராக வளர்த்து வரும் நிலையில் திடீரென காளை இழப்பு ஈடு செய்ய முடியாத சோகத்தை தமிழர்களிடையே ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/