கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையயில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான துளிா் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையயில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான துளிா் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான துளிா் குழந்தைகள் அறிவியல் திருவிழா  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு டிஎன்எஸ்எஃப் மாவட்டத் தலைவா் சா்ஜான் தலைமை வகித்தாா். கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணி முன்னிலை வகித்தாா். அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக விஞ்ஞானி டாக்டர் ஐயப்பன் கலந்து கொண்டர். கெரிகேப்பள்ளி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற துளிர் திறன் அறிதல் தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 100 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி கோளரங்கம், தாவரவியல் கண்காட்சி, பொம்மலாட்டம் போன்ற நிகழ்வுகளை மாணவா்களுக்கு நிகழ்த்திக் காட்டினாா்கள். அறிவியல் கண்காட்சியில், மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு, பல்வேறு அறிவியல், விண்வெளி கோளரங்கம் சம்பந்தமான கருத்துகளைத் தெரிந்து கொண்டனா்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/