சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு இராணிப்பேட்டையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு இராணிப்பேட்டையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.

photo_2023-08-25_19-53-41

இராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர்களை கட்சியை விட்டு நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையொட்டி ஆற்காடு நகரக் கழக பொறுப்பாளர்கள்  நகர செயலாளர் ஜிம் சங்கர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


அ.இ.அதிமுக எதிர்க்கட்சித் தலைவர், பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கழக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்று இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில்  நகர கழக செயலாளர்  WG மோகன் தலைமையில் SM. சுகுமார் மற்றும் முரளி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad