நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி காந்திநகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி காந்திநகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு...

 

IMG-20230826-WA0040

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி காந்திநகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு...

IMG-20230826-WA0039

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி காந்திநகர் மாரியம்மன் கோவில் அருகில் வனத்துறையினர் சந்தன தேவன் என்பவரது 30 வருட காலமாக வைத்திருந்த நிலத்தில்  வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்காக ஜேசிபி வாகனத்தை வைத்து பணி செய்ய துவங்கினர்.


வனத்துறையினரின் அத்துமீறல் நடவடிக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


 சம்பவ இடத்திற்கு வருகை தந்த கூடலூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் ஓவேலி பகுதி முழுவதும் உள்ள பிரிவு 17 நிலங்களையும் பிரிவு 53 உள்ள நிலங்களையும் மறு அளவீடு செய்து வனநிலம் எது  பிரிவு 17 நிலம் எது என்பதை வரையறை செய்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.


 தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓவேலி காந்திநகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி அரசின் கவனத்தை ஈர்ப்பது மேலும் ஓவேலி முழுவதும் சென்று மக்களை திரட்டி அறப்போராட்டம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இன்று கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை வெளியிட்ட பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad