கடலூர் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கடலூர் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு.

கடலூர் மாநகராட்சி ஆணையாளர் அறித்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாநகராட்சி பகுதிகளில் பிரதான சாலைகள் மற்றும்  சாலைகளில் கேட்பாரற்று சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன ஏற்கனவே அனைத்து மாடு வளர்க்கும் உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து உரிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.


இனி வரும் காலங்களில் கடலூர் மாநகர பிரதான சாலைகள் மற்றும் சாலைகளில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்படும் முதல் முறை பிடிக்கப்படும் அனைத்து மாடுகளுக்கும் தலா 10,000 ரூபாய் அபராதமாக உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் இரண்டாம் முறை பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து ஒவ்வொரு மாடுகளுக்கும் தலா ₹20,000 அபராதமாக வசூலிக்கப்படும் மூன்றாம் முறை அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் பிடிபட்ட மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொது ஏலம் விடப்படும்.


அந்த ஏலத்தொகை அபராத தொகையாக பாவிக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதாக கடலூர் மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/