தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைத்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கி வைக்க வந்திருந்தார் அப்போது சட்டமன்ற உறுப்பினரை ஒயிலாட்டம் மயிலாட்டம் மற்றும் மேளதாளங்களுடன் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொடங்கி வைத்தார். பள்ளி சக மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் உணவு அருந்தினார், இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மாடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், துணைத் தலைவர் வெங்கடேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக