புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கொப்பனாபட்டி ஷைன் லயன் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கொப்பனாபட்டி ஷைன் லயன் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.கொப்பனாபட்டி ஷைன் லயன் சங்கம் சார்பில் கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரையூர் அரசு மேன்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் ஷைன் லயன் சங்கத்தின் தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் ஷைன் லயன் செயலர் முத்து, சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்ட உலக தாய் பால் வார விழாவில் பெண்கள், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்களான ஹார்லிக்ஸ், ஆப்பிள், பேரிச்சம்பழம், ரொட்டி உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை ஷைன் லயன் சங்கத்தினர் வழங்கினர். 


இந்நிகழ்வில் மருத்துவர்கள் நவநீதரன், ராம்ராஜ், செவிலியர்கள், ஆசிரியர்கள், ஷைன் லயன் உறுப்பினர்கள் திருஞானம், குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/