காரைக்குடியில் அறிவியல் ஆய்விற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

காரைக்குடியில் அறிவியல் ஆய்விற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான இளம் குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில் நடைபெற்றது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முருகேசன் தலைமை வகித்தார். 


தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவரும் உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் ஜெயசாலா வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் ஜீவானந்தம் அறிமுக உரையாற்றினார். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருப்பொருள் குறித்து கருத்துரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பது குறித்து விளக்கமளித்தார். 


அறிவியல் பிரச்சார இணை ஒருங்கிணைப்பாளர் பிரபு வாழ்த்துரை வழங்கினார். ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல் என்ற கருப்பொருள் உபதலைப்பில் இணை பேராசிரியர்கள் முனைவர் சோமசுந்தரம், முனைவர் நாகேந்திரன், முனைவர் கோமளவள்ளி, முனைவர் ஆறுமுகம் முனைவர் போதகுரு கருத்துரையாற்றினார்கள். உதவி பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா நன்றி கூறினார். சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல் ஒன்றியங்களிலிருந்து ஆசிரியர்கள், வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/