மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி,

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற தொலைக்காட்சி பிரபலம் டாக்டர் மாறன்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி  நிறுவன வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் நிறுவன இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கலை மற்றும் அறிவியல் புலத்தின் இயக்குனர் நஷிமா தலைமையில் நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேராசிரியர் அமித்பாஷா வரவேற்புரை வழங்கினார்.


சிறப்பு அழைப்பாளராக டாக்டர் காயத்ரி மற்றும் ஶ்ரீ சாய்ராம்  இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இயக்குனரும், தொலைக்காட்சி பிரபலமுமான டாக்டர் மாறன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர், தொடர்ந்து பேசிய சிறப்பு அழைப்பாளர்கள் மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் தனது வாழ்வில் எதிர்கொண்ட சவால்களை எடுத்துரைத்தனர்.


அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் மாறன் பேசுகையில் பலம் மற்றும் பலவீனத்தை  மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் வேலைவாய்ப்புக்கான திறனைப் பெறுதலின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார், வகையில் நிகழ்ச்சியில் ஏவிஐடி முதல்வர் செல்வகுமார், துணை முதல்வர் பிரபு நூர்ஜகான், வாணிஅனைத்து துறை சார்ந்த இயக்குநர்கள் பேராசிரியர்கள், பாலகணபதி, சுஹாஷினி, வேலைவாய்ப்பு பயிற்சியாளர் ரோஜாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெயபாரதி நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/