சேத்தியாத்தோப்பு அருகேநெல் குவியலில் இருசக்கர வாகனம் மோதி மூன்று பேருக்கு பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி; உறவினர்கள் சாலை மறியல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சேத்தியாத்தோப்பு அருகேநெல் குவியலில் இருசக்கர வாகனம் மோதி மூன்று பேருக்கு பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி; உறவினர்கள் சாலை மறியல்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி விருத்தாசலம் சாலையில் அம்மன்குப்பம் கிராமப் பகுதியில்  விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை சாலையில் பல இடங்களில் நெல் குவியல் கொட்டி வைத்து மூடி வைத்துள்ளனர்.


அப்போது மூடி வைக்கப்பட்ட நெல் குவியல் மீது இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராமல் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், ராஜா, கார்த்திக் ஆகிய மூன்று பேர் அடிபட்டுகாயம் அடைந்தனர். காயம் பட்டவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்களும், கிராம பொதுமக்களும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 இந்நிலையில் சாலைகளில் நெல் குவியல்களை கொட்டி வைக்கக்கூடாது என தெரிவித்தும், நெல் குவியல்களை கொட்டி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து காயம் பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .பரபரப்பான புவனகிரி-விருத்தாசலம் போக்குவரத்து சாலையில் இரண்டு பக்கமும்  பல்வேறு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 


இந்நிலையில் சாலை மறியல் செய்தவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். மேலும் சாலைகளில் நெல் குவியல்களை கொட்டி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததால் சாலை மறியல் செய்தவர்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். முக்கியமாக விருத்தாசலம் புவனகிரி சாலைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தும் படிவிவசாயிகள் பலர் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை சாலைகளிலேயே கொட்டி மூடி வைத்துள்ளனர்.


இதனை தவிர்க்க வேண்டும், அவர்களுக்கு தாங்கள் வசிக்கும் கிராமங்களிலேயே அதிக இட வசதியுடன் கூடிய உலர்களம் அமைத்துத் தர வேண்டும் எனவும் இதனால் இப்படியான விபத்துகள் நடக்காமல்தடுக்கலாம் எனவும்  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/