தமிழ்நாடு மாநில வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு மாநில வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் குழு ஆணையக் குழுவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி கிரிஜா தலைமையில் நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையில் நீதிபதி திருமதி.மதிவதனி வணங்காமுடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று.. மேலும் நீதிபதி கூறுகையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் அங்கன்வாடி பணியாளர் கலை தாங்கள் பணிபுரியும் இடத்தில் இளம் வயது திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை கண்டறிந்து தகவல் தெரிவிக்கப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறினார் மேலும் வழக்கறிஞர் திருமதி.சித்ரா பாண்ட்ஸ் பேசுகையில் பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து அல்லது பாலியல் கொடுமையால் கர்ப்பம் அடைவதை தடுக்க அங்கன்வாடி பணியாளர்கள் உதவ வேண்டும் எனக் கூறினார்.


தாராபுரம் அரசு மருத்துவமனை கண்கானிப்பாளர் திருமதி.பரஞ்சோதி பேசுகையில் பெற்றோரை விட இளம் குழந்தைகள் அங்கன்வாடியில் தான் அதிகம் நேரம் இருக்கிறார்கள் ஆகவே அக்குழந்தைகளுக்கு தொடுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி சத்தான உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக ஆரோக்கிய தலைமுறையாக உருவாக்க வேண்டும் எனக் கூறினார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி கிரிஜா பேசுகையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் செய்யப்படும் கடமைகளையும் பணிகளையும் மேற்கோள் காட்டி மேலும் தாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் கூறி முகாமை சிறப்பித்தார்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆகியோர்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/