திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐஎஸ்ஆர்ஓ சார்பில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு ஒப்புதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐஎஸ்ஆர்ஓ சார்பில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு ஒப்புதல்.

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐஎஸ்ஆர்ஓ சார்பில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு ஒப்புதல் -  இப்பள்ளி மாணவிகள் 10 பேர் ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் அனுப்புவதற்கு மின்னணு உபகரணங்கள் தயாரித்து பாராட்டுக்களை பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்,  பிளஸ் டூ மற்றும் பிளஸ் 1 மாணவிகள் 10 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இஸ்ரோவில் ஆசாதி சாட் - 1  என்ற செயற்கைக்கோளை அனுப்புவதற்கு மின்னணு உபகரணங்கள் தயாரித்து அனுப்பிய மாணவிகள்,



அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஆசாதி சாட் - 2 செயற்கைகோளை விண்ணில் பாய்வதற்கு மின்னணு உபகரணங்கள் தயாரித்து கொடுத்த இப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளை , தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து மாணவிகளை பாராட்டியதுடன்,  அவர்களை கௌரவித்தார். இதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு இப்பள்ளி மாணவிகளை டெல்லியில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் வரவழைத்து பாராட்டின.


இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் , திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில்,  செயற்கைக்கோள் தயாரிப்பதற்கான தொழிற் (ஆராய்ச்சி) கூடம் (hub) அதாவது ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த கூடத்தில் இப்ப பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது,  பிற பள்ளி பயிலும் சிறந்த மாணவ , மாணவிகளும் இந்த கூடத்திற்கு வந்து தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டு , வளர்ச்சி அடைய செய்யலாமென பள்ளியின் அறிவியல் ஆசிரியை சந்தியா தெரிவித்தார்.


தமிழகத்திலேயே இப்பள்ளிக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு இஸ்ரோ நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என ஆசிரியர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/