மதுரை வாடிப்பட்டி பகுதியில் சுதந்திரதினவிழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

மதுரை வாடிப்பட்டி பகுதியில் சுதந்திரதினவிழா கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த விழாவிற்கு நீதிபதி வெங்கடலெட்சுமி தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 


இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர். வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணைதாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுலவர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 


இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்தியபிரகாஷ், முன்னாள்மாவட்ட துணைத்தலைவர் அயூப்கான், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் உள்பட  தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வாடிப்பட்டி ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 


வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். துணைத்தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவல பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.

பரவை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் கலா மீனாராஜா தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் துணைத்தலைவர், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார்.


பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வட்ராஜா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் கொடியேற்றினார். கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன்  நன்றி கூறினார். 


தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கிறிஸ்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் பூமிநாதன் கொடியேற்றிி இனிப்பு வழங்கினார். முடிவில் ஆசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார். விஷ்வபாரதி வித்யாமந்திர் ஆங்கில பள்ளியில் நடந்த விழாவிற்கு முதல்வர் எஸ்.எஸ்.குபேந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். அன்னை செவிலியர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் ஆசிரியர் தமிழ்செல்வி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/