திருப்பத்தூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்.

திருப்பத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்- சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு


திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 


இதில் 1-முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் இங்கு 60 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் காமராசரின் படம் காண்பிக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்து கல்வி தந்தை காமராசரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என கிராம மக்கள் முடிவு செய்து இன்று மேள தாளங்களுடன் , சிலம்பாட்டத்துடன் பெண்கள் தட்டு வரிசைகளுடனும், ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, காமராசர் அறக்கட்டளை தலைவர் கணேஷ்மல், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். 


காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை நோட்டு புத்தகம், பேனா பென்சில் வழங்கப்பட்டது. 

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. அதற்கும் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 


இந்த விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

காமராசரின் பிறந்த நாளை கொண்டியது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவிழாவாக கொண்டாடியது திருப்பத்தூர் பகுதியில் ஆச்சர்யத்தையும், நெகிழ்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/