வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள கங்கைகொண்டான் மண்டப தெருவில் அமைந்துள்ள கால்வாய்கள் சரிவர தூர் வாராமல் இருப்பதாலும் கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளதாலும் அப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தில் இருந்து மனித மலம் அடிக்கடி நிரம்பி பொதுக் கால்வாயில் மனித மலம் வெளியேறி வருகிறது அதுமட்டுமின்றி சிறிது மழை பெய்தாலும் மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் சாலையில் நிரம்பி வருவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அது மட்டும் இன்றி அப்பகுதியில் ஆறுமுகசாமி மடம் ரத்தப் பரிசோதனை உணவகம் அமைந்துள்ளது பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகவே உள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்றியும் கால்வாயை சுத்தம் செய்யவும் அப்பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பொதுமக்கள் நலன் கருதி இன்று வாலாஜா நகராட்சி ஆணையர் அவர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் சரவணன் அவர்கள் தலைமையில் அப்பகுதி மக்கள் இணைந்து இன்று மனு அளிக்கப்பட்டது நகராட்சி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக