திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்.! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்.!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டமைப்பு சீரமைப்பு சுற்றுப்பயணம் மூலம் நாம் தமிழர் கட்சியை கட்டமைக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்து கட்சியை கட்டமைக்க பலப்படுத்த ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்தும் ஆலோசனைகளை வழங்கியும் பொறுப்பாளர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தும் வருகிறார் . 


இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவரை சிறப்பாக வரவேற்கவும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும் திருப்பூர் சிவன் தியேட்டர் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பாசறை, தொகுதி, கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/