அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை.

.com/img/a/

சமையல் எரிவாயு விலையானது சர்வதேச சந்தை மதிப்பு கச்சா எண்ணெய் விலை இறக்குமதி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது இந்த சிலிண்டர் வீட்டு பயன்பாட்டிற்கு தனியாகவும் வணிக பயன்பாட்டிற்கு தனியாகவும் இருக்கிறது இந்நிலையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு அந்த வகையில் இன்று வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.


இன்றைய நிலவரப்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ 92 குறைந்துள்ளது இதனால் ஏற்கனவே ரூ 1944க்கு விற்பனை செய்யப்பட்டு  வந்தது தற்போது ரூ 1852 க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே வேலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 1118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வர்த்தக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad