ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், சத்துணவு அங்காடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊழியம் பெறுபவர்களுக்கு ரு 2000 - ஒய்வூதியம் என்பதை ரு 9000 ஆக வழங்கிட வேண்டும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு 70 வயது முடிந்தவர்களுக்கு 10% கூடுதல் ஒய்வூதியம் வழங்கிடவேண்டும். 


மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கும் அதே தேதியில் இருந்து, மாநில அரசும் அளிப்பது என்று நடைமுறையை மறுதலித்து ஆறு/மூன்று மாதம் தள்ளி அளிப்பதை கைவிட்டு, அதே தேதிகளில் வழங்கிடவேண்டும் என்பன  உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இதில், நாகையன் மாவட்டத் தலைவர், தலைமையில் நடைபெற்றது. இதில் ,சிறப்புரையாக சுப்பிரமணியன் மாநிலத் துணைத் தலைவர் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் உட்பட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மதுரை மாவட்ட அனைத்து நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/