பந்தலூரை அடுத்துள்ள அம்பலவயல் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சார்பில் போதை விழிப்புணர்வு பேரனி நடைபெற்றது..
பந்தலூர் கூடலூர் பகுதியில் அதிகளவு மாணவர்கள் போதைபலக்கத்திற்கு அடிமையாகின்றனர் பள்ளி பருவத்திலேயே தகாத நண்பர்களுடன் சேர்ந்து போதை பொருட்களைபழகி நாளடைவில் அதற்கு அடிமையாகின்றனர்.இதன் சம்மந்தமாக கல்லூரிகள் பள்ளிக்கூடங்களில் அரசு மற்றும் தன்னார்வளர்கள் மூலம் விழிப்புனர்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பாதிப்புகளை எடுத்து கூறுகின்றனர்.
இந்த விழிப்புனர்கள் காவல்துறையினர்களின் பெரும் பங்கு உள்ளது இது போன்ற விழிப்புனர் இன்றைய தினம் அம்பலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி யின் மூலமாக விழிப்புனர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அரசு மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலாம்பிகை தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஊராச்சி ஒற்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுந்தரன்.அரசு உண்டு உறைவிடபள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்திரம். நெலாக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் டெர்மிளா. கவுன்சிலர்.ஜிசா.பொது மக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த பேரணியானது பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி அய்யங்கொல்லி பஜாரை சென்றடைந்தது பேரணியில் ஒழிப்போம் ஒழிப்போம் போதை பொருளை ஒழிப்போம் என கூறி பதாதைகளை ஏந்திச் சென்றனர். பேரணியில் மாணவன் ஒருவன் எமகண்டன் வேடம் அனிந்தும் இதுபோல சிசர் .பான்பராக்.கட்க போன்ற வேடம் அணிந்தும் போதை என்கின்ற உறுவ பொம்மையை பாடம் கட்டி ஏந்தி மாணவர்கள் விழிப்புனர்வு பேரணி சென்றனர்.
இறுதியில் அய்யங்கொல்லி பஜாரில் மாணவ மாணவியரின் விழிப்புனர்வு ஆடல் பாடல்.நாடகம் போன்றவை நடித்து காண்பித்தனர். இறுதியாக ஆசிரியர் மஹாலிங்கம் நன்றி கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக