அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாருக்கு ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு.
வேலூர் மாவட்டம் அனைக்கட்டு
மலைவாழ் பெண்குழந்தைகள் கல்வி பெறவும் இம் மக்களின் குழந்தைகள் அடிப்படை கல்வி பெறவும் உயர்கல்வி பெறவும் பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுத்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாருக்கு ஆசிரியர்கள் பாராட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் மலைவாழ் பெண்குழந்தைகள் உயர்கல்வி பெற வசதியாக அணைகட்டு பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு தார் சாலை அமைத்து கொடுத்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாருக்கு ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கான நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தலைமையில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், முன்னிலையில் மாவட்ட பொருளாளர் குமார், நிர்வாகிகள் கோபிநாத், சுரேஷ்குமார், ஜெய்சங்கர், சிவராமன், ரமேஷ், செந்தில்குமார், தியாகராஜன், சதீஸ்குமார், தமிழாசிரியர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர்
மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக