கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாடு பட்டும் பலனின்றி காய்ந்து கருகிய நாட்டு கம்பு பயிர்களை பார்த்து கண் கலங்கிய விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை சுற்றியுள்ள எல்லப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ஸகீழைப்பாளையம், மேலப்பாளையம், வண்ணாகப்பாடி, அங்கனூர், S.மலையனூர், புகைப்பட்டி, வீரமங்கலம், பின்னல்வாடி, அலங்கிரி, செம்பியமாதேவி, நொனையவாடி அரும்புலவாடி, நெடுமானூர், எறையூர் பாளையம், எல்லைக்கிரமம், களமருதூர் கிளப்பாளையம், ஆதனூர், மற்றும் நெய்வானை விவசாயிகள் பாடு பட்டும் பலனின்றி காய்ந்து கருகிய மணிலா, சோளம், நாட்டு கம்பு பயிர்களை பார்த்து கண் கலங்கிய விவசாயிகள்.
தமிழக அரசு பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு ஏக்கர் (1) ஒன்றுக்கு 10-000 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு திராவிட மாடல் தமிழ்நாடு முதலமைச்சர்க்கு அனைத்து விவசாயிகளின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் குழு அமைத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தமிழக அரசு ஏற்று பயிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
என்று பச்சை துண்டு கோ.பழனிச்சாமி மாநில அமைப்பு தலைவர் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம்.
- தமிழக குரல் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் - க. சமியுல்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக