அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக, இன்று போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவியரின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க போதை இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் 3200 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரவணன் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக