மதுரையில் அதிமுக மாநாடு: ஏற்பாடுகள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மதுரையில் அதிமுக மாநாடு: ஏற்பாடுகள்.

மதுரையில் அதிமுக மாநாடு: ஏற்பாடுகள்.


மல்லிகை பூ பறிக்கும் பெண்களிடம் நேரில் சென்று அதிமுக மாநாட்டுக்கு நிச்சயமாக வரவேண்டும் என்று மாநாட்டு அழைப்பிதழை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.
அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 
மதுரை அருகே,
வளையங்குளத்தில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. மாநாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும்., மாநாட்டு பொறுப்பாளருமான ராஜன் செல்லப்பா தலைமையில் மாநாட்டிற்கு அழைப்பு விடுவதற்காக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வியாபாரிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்தார்.


அந்த வகையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சம்பக்குளம்., பரம்புபட்டி., ஆலங்குளம்., சோழங்குரணி., வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து வந்தனர். நிலையூர் அருகே சம்பக்குளம் பகுதியில் மல்லிகைப்பூ விவசாயிகளிடம் பூப்பறித்தவரே மாநாட்டிற்க்கு அங்கு பணியில் இருந்த விவசாயிகளிடம் பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து எவ்வித இடையூறும் இல்லாமல் பார்ப்பதற்கு தகரக் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. 60-ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழு மாநாடு நடைபெறும் இடத்தில் ஆங்காங்கே பணியில் ஈடுபட உள்ளனர். 500க்கும் மேற்பட்ட கழிவறைகள்., ஆங்காங்கே குடிநீர் வசதி, மின் விளக்குகள், மாநாடு பொன்விழா புகைப்பட கண்காட்சி தோரண வாயில்., நுழைவாயில்., 51 அடியில் கொடி கம்பம் அதேபோல 350 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், ஐந்து சமையல் கூடங்கள் 1500 தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என, அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துவிட்டு மக்கள் அனைவரும் அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்கு வருமாறு எம். எல்.ஏ.ராஜன் செல்லப்பா அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/