தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தை அரசு பள்ளிகளில் திரையிட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தை அரசு பள்ளிகளில் திரையிட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை


 தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தை அரசு பள்ளிகளில் திரையிட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை


கோவை ஆக் 9, தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் நேரில் சந்தித்தார். அதன் விபரம் வருமாறு.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பிரச்சனைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அச்சம் தவிர் தமிழ் குறும்படம் தயாரிக்கப்பட்டது.


இந்த குறுபடத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் அச்சம் தவிர் தமிழ் குறும்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலும் பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எங்கள் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் அச்சம் தவிர் குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டது.இந்த குறும்படம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இந்திய தலைநகரான புது டில்லியில் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் திரையிடப்பட்டு தேசிய விருதை வென்றது. 139 குறும்படங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.


இந்த குறும்படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட அனுமதி கேட்டு நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம் என கூறினார். இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணி, மகளீர் அணி தலைவி லதாஅர்ஜூனன், ஒருங்கிணைப்பாளர், திருச்சி மாவட்ட செயலாளர் தாமஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/